ஜொலிஜொலிக்கும் நடிகை!! வியப்பில் ரசிகர்கள்!!

Photo of author

By CineDesk

ஜொலிஜொலிக்கும் நடிகை!! வியப்பில் ரசிகர்கள்!!

தமிழில் முன்னணி நடிகை லஷ்மிராய். இவர் தொழில் ரீதியாக ராய் லட்சுமி என்று அழைக்கப்படுகிறார். 2005ஆம் ஆண்டு சினிமா துறையில் அறிமுகமானார். மேலும் 50 க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். மேலும் இவர் தனது 15 வயதில் கண்ணட குறும்படத்தில் நடித்தார். அவரின் நடிப்பை பார்த்து இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் தமிழ் சினிமாவில் நடிக்க பரிந்துரைத்தார்.

அவரின் முதல் படமான படமான கற்க கசடற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பார்த்திபனுடன் ஜோடியாக குண்டக்க மண்டக்க என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்தார். மேலும் காஞ்சனா, அரண்மனை போன்ற வெற்றிப் படத்திலும் நடித்து வெற்றி வாகை சூடி வருகிறார். அவர்களின் ரசிகர்கள் இவருக்கு பெரும் ஆதரவை கொடுத்து வருகின்றார். சினிமாவைத் தவிர தற்போது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.

இதைத் தொடர்ந்து பொதுவாக இவர் சமூகவலை தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார் அவ்வப்போது சில போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜொலிக்கும் புடவை கட்டி போட்டோ ஷூட் செய்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு அவரின் ரசிகர்கள் ஜொலிக்கும் ஏஞ்சல் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.