ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகிறார்.மேலும் அவரது மகள் ரோகிணி தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.
புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப மற்றும் கணினி நிறுவனமான எச்.சி.எல்
1991ஆம் ஆண்டு ஷிவ் நாடார் நிறுவினார்.இதன் தலைமையிடம் இந்தியா ஆகும்.இந்த நிறுவனத்தில் சுமார் 95000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் வரை ரூ.3154 கோடி லாபம் ஈட்டியது.ஆனால் இந்த ஜூன் மாத வரையிலான காலாண்டில் அது ரூ.2925 கோடியாக குறைந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.18,590 கோடி ஆகும்.ஆனால் தற்பொழுது
ரூ.17,841 கோடியாக குறைந்துள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.மேலும் இந்த தலைவர் பொறுப்பிற்கு மகள் ரோஷினி தற்பொழுது பொறுப்பேற்க உள்ளார்.
இதனை அடுத்து ஷிவ் நாடார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும்,தலைமை கொள்கை அதிகாரியாகவும் நீடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.