நந்தியின் ஆணவம் அழிந்த கதை!

Photo of author

By Sakthi

நந்தியின் ஆணவம் அழிந்த கதை!

Sakthi

ஆணவம் என்பது மனிதனின் கடக்க வேண்டிய முதல் படி அது மிகவும் கடினமான பாதையாகவும் இருக்கிறது. ஆணவம் கொண்டவர்கள் யாராகயிருந்தாலும் அவர்களுக்கு இறைவன் நிச்சயமாக பாடம் புகட்டுவார்.

அது மனிதர்களன்றி தேவர்களாக இருந்தாலும் சரி, சிவனின் உடலில் பாதியை பெற்ற சக்தியாக இருந்தாலும் சரி, பாடம் புகட்டப்பட்டே தீருவார்கள். அப்படி ஒரு பாடத்தை நந்தியம் பெருமான் பெற்ற கதையை தற்போது நாம் இங்கே பார்க்கலாம்.

அதாவது சிவனின் இருப்பிடமான கைலாயத்தின் வாசல் காப்பவனாக இருந்தாலும் சிவபெருமானை சுமக்கும் மிகப்பெரிய பேறுபெற்றவர் நந்தியம் பெருமான் சிவபெருமான்தான் இந்த உலகத்தில் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு ஒருமுறை உலக உயிர்களுக்கு படியளப்பதற்காக சிவபெருமான் கிளம்பினார், நந்தி அவரை சுமந்து கொண்டு சென்றார்.

அப்படி செல்லும் வழியில் நந்திக்கு ஒரு சிந்தனை ஏற்பட்டது உலகத்திலிருக்கின்ற அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் சிவபெருமானையே நாம் சும்சக்கிறோமென்றால் நம்முடைய சக்தி எப்படிப்பட்டதாக இருக்கும் என நினைக்க தொடங்கினார்.

சிவபெருமானே ஜீவனாக இருக்கிறார் என்பது சிவனடியார்களின் கூற்று அனைத்து உயிர்களின் ஆன்மாவாக சிவபெருமான் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்படி இருக்கும்போது நந்தி நினைத்த அந்த ஆழமான சிந்தனை சிவபெருமானுக்குத் தெரியாமல் இருந்து விடுமா என்ன? நந்திக்கு தகுந்த பாடம் கற்பிக்க நினைத்தார் சிவபெருமான்.

உலகை வலம் வந்து கொண்டிருந்த சமயத்தில் தன்னுடைய சடை முடியிலிருந்து ஒரே ஒரு முடியை மட்டும் எடுத்து நந்தியின் மீது வைத்துவிட்டு கீழே இறங்கிவிட்டார் சிவபெருமான்.

அதுவரையில் உலகத்தின் பரம்பொருளாக விளங்கிவரும் சிவபெருமானையே சுமந்து கொண்டிருந்த நந்திக்கு தன் மேல் இருந்த ஒரே ஒரு முடியை சுமக்க முடியவில்லை, பாரம் தாங்காமல் தள்ளாடிப் போனார்.

ஒரு அடி கூட அவரால் முன்னெடுத்து வைக்க முடியவில்லை, தன்னுடைய இந்த இயலாமை அவரை கலங்கடித்து விட்டது, இதுவரையில் அவர் மனதில் குடிகொண்டிருந்த ஆணவம் எங்கே சென்றதென்றே தெரியவில்லை.

அவர் தன்னுடைய அருகில் நின்று கொண்டிருந்த சிவபெருமானை கலங்கும் விழிகளோடு பார்த்தார். அவருடைய அந்த பார்வை எனக்கு ஏன் இந்த நிலை என்பதை போல இருந்தது.

அப்போது அதனை புரிந்து கொண்ட சிவபெருமான் நந்தியே உன்னுடைய மனதில் இருந்த ஆணவத்தை அழிக்கவும், நானே உலக உயிர்களின் ஆன்மாவாக உலக உயிர்களின் இயக்கமாக இருக்கிறேன் என்பதை நீ உணர்ந்து கொள்ளவும், தான் இப்படி செய்தேன் என தெரிவித்தார்.

நான் உன் மேலிருக்கும் வரை தான் உன்னால் என்னை சுமக்க முடிந்தது உன்னில் ஆணவம் குடி வந்ததும் நான் உன்னை விட்டு விலகி விட்டேன். நான் விலகியதால் உன்னுடைய இயக்கமும் என்று போனது என தெரிவித்தார்.

உண்மையை உணர்ந்து கொண்ட நன்றி அனைத்தும் இறைவனின் செயலால் நடப்பவை என்ற எண்ணத்தை தன்னுடைய ஆழ்மனதில் வேரூன்றி கொண்டார்.