சிவனேனு சென்றவருக்கு வந்த சோதனை!? நடந்தது என்ன?

0
204
Shivanenu went to the test!? what happened?
Shivanenu went to the test!? what happened?

சிவனேனு சென்றவருக்கு வந்த சோதனை!? நடந்தது என்ன?

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் டாஸ்மார்க்கடை மற்றும் பார் ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 25 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் நேற்று இரவு மது பாட்டில்களை வாங்கினர். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த முதியவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

தகராறில் ஆத்திரம் அடைந்த இரு இளைஞர்கள் பீர் பாட்டிலால் முதியவரை தாக்க முயன்றனர். இந்நிலையில் முதியவர் விலகி விட்ட நிலையில் சாலையில் கொண்டிருந்த தாதகாப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்குமார் இவருடைய வயது 24. இவர் அங்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மது பாட்டிலுள்ள சிறு துண்டு  அவர் மூக்கில் பட்டு  சிறு காயம் ஏற்பட்டது.

இதனால் ராம்குமார் அலறினார். பின்பு இதனைப் பார்த்த அந்தப் பகுதியினர் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் விரைந்து சம்பவம் ஏற்பட்ட  இடத்திற்கு வந்தனர். போலீசார் வரும் நிலையை அறிந்த இரு இளைஞர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து ராம்குமாரை அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ராம்குமார் சிகிச்சை பெற்றப்பின் வீடு திரும்பினார். இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிப்பு ஏற்படுத்திய இரு இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.

Previous articleதஞ்சாவூர் மாவட்டத்தில் நில தகராறில் பெண்ணிற்கு அரிவாள் வெட்டு! பரபரப்பில் அப்பகுதி!
Next articleஉடல்நலப் பிரச்சனையால் அவதிப்படும் அனுஷ்கா.. வாய்ப்புகளை மறுக்க இதுதான் காரணமா?