ரசிகரை திட்டிய சிவாங்கி! எதற்காக தெரியுமா?

0
177
#image_title

சிவாங்கி என்றால் தெரியாதவர்களே யாரும் கிடையாது. சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டு வெற்றி பெற முடியாத நிலையிலும் குக் வித் கோமாளியில் ஒரு கோமாளியாக தொடங்கி தனது சமையல் திறனை காட்டி இன்று அவரே சமையல் போட்டியில் கலந்து வெற்றி பெற்ற சம்பவமும் உண்டு.

 

இப்பொழுது அவர் பல வீடியோக்களை வெளியிட்டு அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கங்களிலும் youtube சேனல்களிலும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். அவர் குக் வித் கோமாளியை அடுத்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் ஷாம் விஷாலுடன் பாடியும் மற்றும் அஸ்வினுக்காக அடிபொலி பாடலை பாடியும் நல்ல பெயரை பெற்றிருந்தார்.

 

இருவர்களியும் சம்பந்தப்படுத்தி பேசினாலும் இப்பொழுது இவர்கள் இருவரும் அவர்களுக்கு சம்பந்தமாக எந்த ஒரு போஸ்டயும் வெளியிடுவதில்லை என்றே கூறலாம்.

 

இப்பொழுது இசை அமைப்பாளர் மகனுடன் சேர்ந்து பாட்டு பாடி அந்தப் பாட்டும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பாட்டு மட்டும் பாடாமல் ஆடியும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

 

தனது ரசிகர் ஒருவர் செய்த செயலை கண்டு தான் சிவாங்கி இப்பொழுது அவரைச் செல்லமாக திட்டி இருக்கின்றார்.

 

சிவாங்கியை பிடித்துப்போன ரசிகர் ஒருவர் ஷிவாங்கிக்கு ஒரு போட்டோ பிரேம் ஒன்றை பரிசாக வழங்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

 

அது மட்டும் இல்லாமல் நான் உங்களுக்காக டாட்டூ போட்டு இருக்கின்றேன், அதை காட்டவா என்று சிவாங்கிடம் ரசிகர் கேட்க சிவாங்கி ஏன்? இதெல்லாம் பண்றீங்க இதெல்லாம் பண்ணாதீங்க என்று செல்லமாக ரசிகரை திட்டியுள்ளார்.

author avatar
Kowsalya