சேவாக்கின் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம் உள்ளது ! பங்கமாக கலாய்த்த சோயிப் அக்தர் !

0
163

சேவாக்கின் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம் உள்ளது ! பங்கமாக கலாய்த்த சோயிப் அக்தர் !

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விரேந்திர சேவாக் தன்னைப் பற்றி கூறிய கருத்து ஒன்றுக்கு நக்கலாக பதிலளித்துள்ளார். இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான சேவாக் நகைச்சுவைக்கு பெயர் போனவர். அவரது டிவிட்டர் பதிவுகள அவரது நக்கல் தொனிக்காக பெயர் போனவை.

இந்நிலையில் அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரைப் பற்றி ஒரு கமெண்ட் ஒன்றை அடித்தார். அதில் ‘அக்தருக்குப் பணம் தேவை என்பதால் இந்தியாவுக்கு சாதகமாக பேசுகிறார்’ எனக் கூறியிருந்தார்.

இதுபற்றி அப்போது எதுவும் பதில் அளிக்காத அக்தர் இப்போது தன்னுடய யுடியூப் சேனலில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘ஒருவரிடம் எவ்வளவு செல்வம் இருக்க வேண்டும் என்பதை நீங்களோ நானோ முடிவு செய்ய முடியாது.

அது அல்லாவால் அளிக்க படுவது. என்னிடம் சேவாக்கின் தலையில் உள்ள முடிகளை விட அதிகமாக பணம் உள்ளது. இதை நான் விளையாட்டாகதான் சொல்கிறேன். பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

களத்தில் இருக்கும் போது எதிர் எதிர் அணியில் இருந்து மோதிக்கொண்ட இருவரும் ஓய்வு பெற்ற பின்னரும் அதுபோலவே தொடர்ந்து மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அக்தரின் இந்த நக்கலுக்கு விரைவில் சேவாக் டிவிட்டரில் பதிலளிப்பார் என இந்திய ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

Previous articleமனைவியை பாலியல் பலாத்காரம் செய்த கணவர்:வழக்கு தொடுத்த மனைவி ! நீதிமன்றம் தீர்ப்பு !
Next articleரஜினி, சிறுத்தை சிவா காம்போவில் உருவாகும் படத்தின் தலைப்பு : வெளியான தகவல்… ரசிகர்கள் குஷி !