ADMK: அதிமுகவின் கட்சிக்குள்ளையே எடப்பாடி மீது மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் தான் உள்ளனர். அதிலும் எம்ஜிஆர் காலத்திலிருந்து இருக்கும் செங்கோட்டையன் முழுவதுமாக எடப்பாடியை எதிர்த்தது அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான். இதன் ஆரம்ப கட்டமாக பொது நிகழ்ச்சி ஒன்றில் தற்போது வந்த அமைச்சர்கள் பெயர்களை விளம்பரப்படுத்தி தன்னை இறுதிக்கு தள்ளியது என பல காரணங்கள் இதற்கு பின்னணியில் கூறப்பட்டது.
நாளடைவில் சட்டப்பேரவை கூட்டத்தின் போது எடப்பாடிக்கு ஆதரவாக செங்கோட்டையன் மீண்டும் முன் நின்றார். அதேபோல எடப்பாடி முதல்வராகவில்லை என்றால் அந்த வாய்ப்பு ஓபிஎஸ்ஐ தாண்டி செங்கோட்டையனுக்கு தான் சென்றிருக்கும். இப்படி இருக்கும் வேலையில் இதனை சுதாகரித்துக் கொண்டுதான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் செங்கோட்டையனை எடப்பாடி நிராகரித்து வந்தார்.
இவையனைத்தும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்ததாக கட்சி நிர்வாகிகள் நம்பினர். அதற்கு முன் இதனை சமரசப்படுத்த பல கட்ட பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் மீண்டும் செங்கோட்டையன் முரண்டு பிடிக்க ஆரம்பித்துள்ளார். அதாவது எடப்பாடி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை மேற்கண்டு வருகிறார்.
அதன் தொடக்க விழா நடைபெற்ற போது அழைப்பு விடுத்தும் செங்கோட்டையன் வரவில்லை. இது குறித்த பேச்சு தான் தற்போது அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாகவே செங்கோட்டையனை திமுகவினர் தங்கள் பக்க இழுக்க நினைத்தனர். ஆனால் அவர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தற்போது மீண்டும் அதரீதியான பேச்சுவார்த்தையை கைவிடாமல் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் நடத்திக் கொண்டுதான் வருகின்றனர்.
அதன் விளைவாக தான் தற்போது இந்த தொடக்க விழாவில் செங்கோட்டையின் கலந்து கொள்ளவில்லை என பேச்சு அடிபட்டு வருகிறது. அதேபோல இம்மாதம் ஐந்தாம் தேதிக்குள் தனது முடிவை அவர் கூறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அதிமுகவிலிருந்து வெளியேறி விட்டு மாற்று கட்சியில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்பதை கூற இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர்.