Virus: புதிய வகை வைரஸானது ரஷ்ய நாட்டில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடூர வைரஸ் தாக்குதலினால் அதிக உடல் சூடு ஏற்பட்டு தொடர் இருமல் உண்டாகுகிறதாம். அப்படி இருக்கும் போது ரத்த வாந்தி எடுப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால் இதனை ரஷ்ய நாடானது தொடர்ந்து மறைத்து வருவதாக உலகளாவிய தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாகவே கொரோனா என்ற தொற்றால் பேரழிவை சந்தித்த நாடுகள் தற்போது வரை பொருளாதார ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மீள முடியாமல் உள்ளனர். மீண்டும் புதிய வகை வைரஸ் ஏதேனும் பரவ தொடங்கினால் அது குறித்து அறிவிப்பை வெளியிடலாம். இதனால் அண்டை நாடுகள் இது ரீதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க ஏதுவாக இருக்கும்.
இப்படி ரஷ்ய நாடானது தொடர்ந்து மர்ம வைரஸ் குறித்து தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றால் இது அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். அப்படி செல்லும் பட்சத்தில் கட்டாயம் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். அதேபோல இந்த மர்மமான வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என்றே தோன்றுகிறதாம். இதனால் குழப்ப நிலையில் இதர நாடுகள் உள்ளன.
மேற்கொண்டு இந்த வைரஸ் பாதித்தால் இந்த அறிகுறிகள் மட்டுமின்றி வேறு சில அறிகுறிகளும் உள்ளதாம். படுத்தால் மீண்டும் எழுந்திருக்க முடியாமல் போகும் அளவிற்கு உடல் வலி ஏற்படுமாம். இது போல தான் ரஷ்யாவில் அலெக்சாண்டுரா என்ற பெண்ணுக்கு இந்த பாதிப்பு இருந்தது குறித்து தகவல்கள் பரவி வந்துள்ளது. ஆனால் ரஷ்ய அரசாங்கம் புதிதாக எந்த ஒரு வைரஸும் பரவவில்லை, இது ரீதியாக பொய் தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளனர்.