தெலுங்கானா பாஜகவில் நேற்று (திங்கட்கிழமை) கோஷாமஹால் தொகுதி எம்எல்ஏ டி. ராஜா சிங் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மாநில பாஜக தலைவராக ராம் சந்தர் ராவ் நியமிக்கப்படவுள்ள தகவல்களால் ஏற்படும் ஏமாற்றத்தையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். இது தெலுங்கானா பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜா சிங் தனது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் ஜி. கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளார். அதில், பாஜகவுக்கு பல ஆண்டுகள் உறுதுணையாக இருந்த லட்சக்கணக்கான காரியகர்த்தர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்தது போல இந்த முடிவு உள்ளது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
“இந்த முடிவால் எனக்கு மட்டுமல்ல, பாஜகவை நம்பிய லட்சக்கணக்கான காரியகர்த்தர்கள், தொண்டர்கள், வாக்களிப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா பாஜக அரசை உருவாக்க தயாராக இருந்தது, ஆனால் தவறான தலைமைத் தேர்வால் அந்த வாய்ப்பு இழக்கப்பட்டுவிட்டது” என்று ராஜா சிங் குறிப்பிட்டுள்ளார்.
பின்புலத்தில் இருந்து சிலர் நஇயக்குவதால் கட்சி அரசியல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனிநபர் சலுகைகள், கட்சியின் இலக்கை மேல் நடத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
“எனது கட்சி நம்பிக்கையை இழந்தாலும், ஹிந்துத்துவ மற்றும் தர்ம சேவைக்கு நான் எப்போதும் நம்பிக்கையுடன் இருப்பேன். இந்த முடிவு கடினமானது தான், ஆனால் தேவையானது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோருக்கு நேரடி வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
“தெலுங்கானா பாஜக வளர்ச்சி பாதையில் செல்வதற்கு சரியான தலைமை தேவை. தவறான முடிவால் அந்த வாய்ப்பு வீணாகிவிடக்கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பாஜகவில் இருந்து விலகினாலும், “ஜெய்ஹிந்த், ஜெய் ஸ்ரீ ராம்” என முடிக்கும் ராஜா சிங், தனது ஹிந்துத்வ போராட்டம் தொடரும் என உறுதியளித்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை தற்போதைய தலைவரும் அமைச்சருமான ஜி. கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளார்.
அறிக்கை வெளியீட்டு பின்னணி:
ராஜா சிங், முன்பும் பல சர்ச்சையான கருத்துகளுக்காக பரபரப்பை ஏற்படுத்தியவர். கடந்த ஏப்ரல் மாதம் ஹைதராபாதில் நடந்த ராம் நவமி பேரணியில், அவர் Waqf சட்ட திருத்தம் குறித்து பேசினார் மற்றும் இந்தியா ஒரு ஹிந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இவரின் இந்த ராஜினாமா மூலம் தெலுங்கானா பாஜக உட்கட்சி குழப்பம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.