டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி அகமதாபாத்திலிருந்து மும்பை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில் அவர் சென்று கொண்டிருந்த கார் டிவைடரில் மோதியதன் காரணமாக, அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரோட்டி அருகே இருக்கின்ற பாலத்திலுள்ள டிவைடரில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதி விபத்துக்குள்ளானது. அந்தக் காரில் 4 பேர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அதில் சைரஸ் மிஸ்திரி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த நிலையில், உயிரிழந்த மற்றொரு நபர் ஜஹாங்கீர் பின்ஷா பந்தோல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதோடு காயமடைந்தவர்கள் அனய்தா பண்டோல் மற்றும் டேரியஸ் பண்டோல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கின்றன. இந்த நிலையில், அவருடைய இறப்பு தொடர்பாக விரிவான விசாரணைக்கு மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சைரஸ் மிஸ்திரி விபத்தில் துரதிஷ்டவசமாக உயிரிழந்தது தொடர்பாக அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும், அடைந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.