மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவ்வாறு நடந்து கொண்டால் ஓய்வூதியம் கிடையாது!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்.அகவிலைப்படி,போனஸ் வழங்கிய பின் தற்போது ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத் தொகையை கொடுப்பதற்கு அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அரசு முக்கிய விதியை மாற்றி அமைத்துள்ளது.மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த விதியை ஊழியர்கள் கடைபிடிக்காமல் புறக்கணிக்கும் பட்சத்தில் அவர்கள் ஓய்வுபெற்ற பின் ஓய்வூதியம் மற்றும் கிராஜிவிட் வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் அரசின் புது விதிகளின் அடிப்படையில் பணிக்கு சரியான நேரத்தில் வராமல் இருப்பது, கவனக்குறைவு, அலட்சியமாக பணி புரிவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுடைய ஓய்வூதியம் மற்றும் கிராஜிவிட்டி நிறுத்தப்படும் என அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் பணியின்போது அலட்சியமாக ஈடுபட்டு அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களது பணி ஓய்வுக்கு பிறகு கிராஜிவிட்டி மற்றும் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து முறையான அறிவிப்பை அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் விலைவாசி உயர்வு போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கான அகவிலைபடி உயர்த்தப்படுவது வழக்கம்.அந்தவகையில் நடப்பாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.அதனால் இந்த மாத இறுதிக்குள் அகவிலைப்படி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.