குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.. டாஸ்மாக் கடைகள் மூடல்!! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0
125
Shock news for citizens.. Tasmac shops are closing!! A sudden announcement by the minister!!
Shock news for citizens.. Tasmac shops are closing!! A sudden announcement by the minister!!

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.. டாஸ்மாக் கடைகள் மூடல்!! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் அதிக அளவு வருமானம் வருவதே இந்த மதுபான கடைகள் மூலம் தான்.ஆனால் எந்த ஆட்சி அமைந்தாலும் பூரண மது விலக்கு வேண்டும் என்பதுதான் மக்களின் அன்றாட கோரிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் 500 மதுபான கடைகள் மூடப்படும் என்று கூறியிருந்தது. சட்டப்பேரவையில் அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இரண்டு வருடங்களாகியும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக கடைக்கு தலா ஐம்பதாயிரம், கஞ்சா விற்பனை என தொடங்கி தற்பொழுது கள்ளச்சாராயம் உயிரிழப்பில் கொண்டு வந்து முடித்துள்ளது. கள்ளச்சாராயம் உயிரிழப்பு சம்பந்தமாக பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மதுபான பாட்டில்களிலும் நிர்ணயித்த விலையை விட கூடுதல் கட்டணத்தையும் வசூல் செய்ய ஆரம்பித்தனர்.

இதனையெல்லாம் மக்கள் எதிர்த்து கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அடுக்கடுக்காக செந்தில் பாலாஜி மீது திமுக ஆட்சி மீதும் புகார்கள் வர தொடங்கியது. இதனையெல்லாம்  ஈடுகட்டும் விதமாக தான் முதலில் கள்ளச்சாராயம் உயிரிழப்பிற்கு முதல்வர் அவர்கள் நிவாரண தொகை அறிவித்தார். அதேபோல செந்தில் பாலாஜி மீது தற்பொழுது வந்துள்ள புகாரால் வேறொருவருக்கு மதுபான நிர்வாக துறையை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேச்சுகள் அடிபட ஆரம்பித்தது.

இவ்வாறு ஆரம்பித்த உடனே செந்தில் பாலாஜி தன் பொறுப்பை தக்கவைத்துக் கொள்ள 500 மதுபான கடைகள் மூடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தற்பொழுது எந்தெந்த மாவட்டத்தின் எந்தெந்த மதுபான கடைகள் மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என்ற வகையில்  கணக்கெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இவரின் இந்த செயலால் இவர் மேல் அடுக்கப்படும் புகார்கள் மறைந்து போகும் என எண்ணுகிறார். அதுமட்டுமின்றி இவர் மேல் வரும் புகார்களுக்கு முடிவு கட்டும் விதத்தில் இந்த நடவடிக்கை தற்பொழுது உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.