கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது!
கடந்த இரண்டு ஆண்டுகால கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்தும் வகுப்புகளும் ஆன்லைன் மூலமாக தான் நடத்தப்பட்டது.பொது தேர்வு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் கடந்த 2022 ஆம் ஆண்டுதான் திறக்கப்பட்டது.இந்த ஆண்டு மாண்டஸ் புயல் ,பருவத் தேர்வு,பொங்கல் விடுமுறை என அதிகளவு விடுமுறை அளிக்கபட்டது அதனால் பாட பகுதிகள் முழுமையாக நடத்தி முடிக்காமல் இருகின்றது.
அதனால் தமிழக உயர்கல்வித் துறை கடந்த நேற்று முன்தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக வகுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வருகிற மே மாதம் ஒன்றாம் தேதிக்குள் பாடங்கள் அனைத்தையும் முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும்.நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.
அதனால் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரி மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு பாடங்களை மே 1ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய கல்லுரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.பாடங்களை விரைந்து முடிக்க ஆசிரியர்களுக்கு சிரமம் அதிகம் ஏற்படும் அதனால் அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.