விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்! ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே உதவித்தொகை!
நேற்று வேளாண் துறை செயலாளர் சி சமயமூர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் மத்திய அரசாங்கம் 12வது தவணை தொகையை விடுவிப்புகள் சில புதிய வழிமுறைகளை கொண்டு வந்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து தவணை தொகைகளுக்கும் பயனாளிகளின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து திட்ட பயனாளிகளுக்கும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் ஆதாரனை இணைக்க வேண்டும். மேலும் கைப்பேசிக்கு வரும் மட்டும் ஒருமுறை பயன்படுத்தும் கடவு சொல்லை பெற்று ஆதார் எண் பதிவை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
இதில் சிரமம் உள்ளவர்கள் பொது சேவை மையங்களில் தங்களது பதிவு செய்த ஆதாரர் எண்களை உறுதி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தலா 2000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 38 லட்சம் விவசாயிகளின் வங்கிகணக்கில் 11 தவணைகளாக நேரடி மானியமாக வரவு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.