2 லட்சத்திற்கு மேல் நகையை அடகு வைத்துள்ளீர்களா.. வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By Rupa

2 லட்சத்திற்கு மேல் நகையை அடகு வைத்துள்ளீர்களா.. வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Rupa

shock-news-for-jewelery-pawners-no-more-annual-interest

RBI: மத்திய பட்ஜெட் கூட்டு தொடரின் மூலம் நகை கடன் ரீதியாக புதிய அறிவிப்புகள் வெளியாகியது. அதன்படி தேசிய வங்கிகளில் நகைகளை அடகு வைத்து திருப்பும் போது அதனுடைய வட்டி மற்றும் அசல் இரண்டையும் செலுத்த வேண்டும். மேற்கொண்டு உடனடியாக அன்றைய தினமே நகையை அடகு வைக்க முடியாது. மாறாக அடுத்த நாள் தான் அடகு வைக்க முடியும். இப்படி நகை கடன் ரீதியான அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் மக்கள் பெருமளவு சிரமப்படுவர் என்றும், கடன் வாங்கும் பட்சத்தில் வட்டி ரீதியாக பெரும் சிக்கலை சந்திக்க கூடும் என தெரிவித்தனர். இதனால் தேசிய வங்கிகளில் வைத்திருந்த பயனாளிகள் தங்களது நகையை தற்பொழுது கூட்டுறவு சொசைட்டிக்கு மாற்றி வருகின்றனர். இங்கு வட்டி விகிதம் 12 சதவீதம் என்ற அளவில் அதிகமாக இருந்தாலும் தேசிய வங்கிகளில் உள்ள விதிமுறைகள் இங்கு கிடையாது. ஆனால் தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது நகை அடகு வைப்பவர்கள் இரண்டு லட்சத்திற்குள் வைத்தால் மட்டுமே ஆண்டு வட்டி செலுத்த முடியும். மாறாக இரண்டு லட்சத்திற்கும் மேல் நகையை வைத்து கடன் வாங்குபவர்கள் மாதம்தோறும் வட்டி கட்ட வேண்டும் எனக் கூறியுள்ளனர். இது ஒரு சில நபர்களுக்கு தெரியாமல் வட்டி கட்டாமலேயே உள்ளார்களாம். இது ரீதியான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்தந்த கூட்டுறவு வங்கிகள் நாளடைவில் தெரிவிக்கும் என்று கூறியுள்ளனர்.