ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமித்து பணியாற்றி வருகின்றனர் .இந்நிலையில்  பள்ளிகல்வித்துறை முன்னதாகவே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என தெரிவித்திருந்தனர்.

தற்காலிக தொகுப்பூதியத்தில் பணி செய்யும் ஆசிரியர்கள் ஒரு வாரத்தில் மூன்று அரை நாள் பணி பஊரிந்தால் மட்டுமே அந்த மாதத்திற்கான முழு மாத ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்வியாண்டும் ஜூன் முதல் ஏப்ரல் வரை நான்கு வாரங்கள் முழுமையாக பள்ளிகள் செயல்படாத மாதங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் 12அரை நாட்கள் பணியாற்றும் வகையில் பணி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

மேலும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் ரூ 10,000 தான்.பணி நிரந்தரம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது விடுமுறை எடுக்க வேண்டாம் அவ்வாறு விடுமுறை எடுத்தால் சம்பளம் பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவல் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .