அரசு பள்ளிகளை தத்தெடுப்பதாக வெளியான தகவல் குறித்து தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம் ஒன்றை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் இணைந்து புதிய சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதில் அரசு பள்ளிகளுக்கு உதவும் நோக்கில் அறிக்கை ஒன்று வெளியிட்டனர். அதாவது அரசு பள்ளிகளில் படித்து தற்போது தனியார் பள்ளியை நடத்தி வரும் நாங்கள், தங்களால் முயன்ற உதவிகளை சி எஸ் ஆர் மூலம் செய்வதாக தெரிவித்துள்ளனர். சி எஸ் ஆர் மூலம் உதவி செய்வோம் என்று கூறியது நாளடைவில் அரசு பள்ளியையே தத்தெடுக்க போவதாக தனியார் பள்ளிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது என்ற பொய்யான தகவல் பரவியுள்ளது.
இது குறித்து பல தரப்பிலிருந்து கண்டனம் எழுந்த நிலையில் தெளிவான விளக்கத்தை தற்போது தனியார் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ளது. நாங்கள் சி எஸ் ஆர் மூலம் அரசு பள்ளிகளுக்கு குறிப்பிட்ட உதவியை செய்வதாக தெரிவித்தோம். அந்தவகையில் பள்ளிகளுக்கு அறிவுசார் புத்தகங்கள் வழங்குவது, பள்ளிகளுக்கு வர்ணம் தீட்டுவது, விளையாட்டு வளாகத்தை சுத்தப்படுத்துவது உள்ளிட்டவைகளை தான் செய்வோம் என கூறி அறிக்கை வெளியிட்டோம்.
ஆனால் தனியார் பள்ளியையே தத்தெடுப்பதாக ஒருபோதும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு பொய்யான தகவல் பரப்பி உதவி செய்ய முன்வந்த தாளாளர்களை அவமதிக்கும் விதத்தில் பேசுவதா?? மேற்கொண்டு இந்த பொய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
நாங்கள் எந்த ஒரு இடத்திலும் தத்தெடுத்துக் கொள்கிறோம் என்ற வார்த்தையை விடவில்லை மாறாக சிஎஸ்ஆர் மூலம் எங்களால் இயன்ற உதவியை அரசு பள்ளிகளின் அடுத்த கட்ட நகர்வுக்கு உதவும் வகையில் செய்வதாக தான் தெரிவித்தோம் என கூறியுள்ளனர்.