பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 10000 பேர் பணி நீக்கம்!
உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார். அதனை தொடர்ந்து அவர் ஆள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம், அமேசான்,கூகுள் போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது.
இந்நிலையில் அமெரிக்காவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் அலுவலகங்களை கொண்டுள்ள பிரபல சமூக வலைதளம் நிறுவனமான பேஸ்புக் தற்போது அதே முடிவை எடுத்துள்ளது. மேலும் அத்துறை சார்ந்த பணியாளர்கள் இடையே பணி தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது. பேஸ்புக் கடந்த ஆண்டு நவம்பரில் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.
மேலும் பத்தாயிரம் ஊழியர்களை வெளியேற்ற முடிவெடுத்துள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்ந்து குறைந்து வருவது, சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாததாக உள்ளது என நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸ்க்ர்பர்க் கூறியுள்ளார்.
இந்த பேஸ்புக் நிறுவனம் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஆள்ககுறைப்பு நடவடிக்கை தான் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், டுவிட்டர் நிறுவனங்கள் முன்னதாகவே முதல் கட்ட ஆள் குறைப்பை மேற்கொண்டுள்ளன, பேஸ்புக் தற்போது இரண்டாவது கட்ட ஆள் குறைப்பை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.