தமிழகத்தில் நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால் இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் மற்றும் பல முக்கிய நபர்களும் இந்த நோய் தொற்றினால் உயிரிழந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையை தற்சமயம் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு இந்த நோய் தொற்றினால் உயிரிழந்திருக்கிறார்.
இந்த நோய்த் தொற்று பாதிப்பின் காரணமாக, பாண்டு மற்றும் அவருடைய மனைவி குமுதா உள்ளிட்டோர் சென்னையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். அவர்கள் தீவிர சிகிச்சை கண்காணிப்பில் இருந்த சமயத்திலும் கூட இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்திருக்கிறது . அவருடைய மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ச்சியாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
பாண்டு மற்றும் குமுதா உள்ளிட்ட தம்பதிகளுக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டோ ஆகிய மூன்று மகன்கள் இருக்கிறார்கள். கேப்பிடல் லெட்டர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த நடிகர் பாண்டு பல திரையுலக பிரபலங்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் பெயர் பலகைகளை வடிவமைத்து கொடுத்திருக்கிறார்.
அதோடு அதிமுக கொடியை வடிவமைத்து கொடுத்ததும் இவர்தான் என்று சொல்லப்படுகிறது. அதோடு இவர் அவருடைய பேச்சு சிரிப்பு மற்றும் நடிப்பு காரணமாக, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. அவருடைய திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது அதோடு அவருடைய ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்