யூடியூப் வீடியோவை லைக் செய்ததால் அதிர்ச்சி! பறிபோன 42 லட்ச ரூபாய்!!

0
188
#image_title
யூடியூப் வீடியோவை லைக் செய்ததால் அதிர்ச்சி! பறிபோன 42 லட்ச ரூபாய்!
யூடியூப் வீடியோவை லைக் செய்தால் பணம் வரும் என்று கூறியதால் நம்பி பணத்தை போட்ட நபர் அந்த பணத்தை முழுவதுமாக ஏமாந்து உள்ளார். இது போன்ற மோசடிப் புகார்கள் இன்றளவும் இருந்து வருகின்றது.
பணத்தை திருடும் வகைகளில் தற்போது டிரெண்டிங்கில் யூடியூப் வீடியோ லைக்ஸ் என்ற பெயரில் மோசடி செய்து பணம் பறிப்பது தான். இதனால் பல பேர் பணத்தை இழந்துள்ளனர். இன்று வரை இந்த மோசடி நடந்து வருகின்றது.
இந்த கும்பல் பகுதி நேர வேலை தேடுபவர்களுக்கு ஒரு நாளுக்கு 1000 முதல் 2000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று விளம்பரத்தை அனுப்பி யூடியூப் வீடியோவை லைக் செய்ய வைக்கின்றது. முதலில் நாம் செய்யும் லைக்குகளுக்கு பணத்தை நமக்கு அனுப்புவது போல அனுப்பி பிறகு நாம் பணத்தை கட்டி அதில் வேலை செய்வது போல செய்ய வைக்கும் இந்த கும்பல் சிறிய தொகைகளை திருப்பி கொடுத்து அவர்களின் மீது நமக்கு நம்பிக்கை வருவது போல செய்கிறது. பிறகு பெரிய பெரிய தொகையை மூதலீடு என்ற பெயரில் இந்த கும்பல் நம்மிடம் இருந்து பணத்தை திருடி விடுகின்றது. இதனால் நபர் ஒருவர் 42 லட்ச ரூபாயை இழந்துள்ளார்.
குருகிராமை சேர்ந்த நபர் ஒருவர் இந்த கும்பலிடம் சிக்கி 42 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். ஐடி கம்பெனியில் வேலை செய்யும் இவர் தனது மனைவியின் வங்கி கணக்கிலிருந்தும் இந்த மோசடி கும்பலிடம் பணத்தை பறிக் கொடுத்துள்ளார்.