அதிர்ச்சியில் உறைந்திருக்கும் இல்லத்தரசிகள்! தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு!
கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீட்டை விட்டுவிட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் காரணமாக பலரும் தங்கம் போன்ற பொருட்களின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது.கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை தொடங்கி தற்போது பொங்கல் பண்டிகை வரை தங்கத்தின் விலை உயர்ந்து தான் வருகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சவரன் தங்கத்தின் விலை 42,368 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த நாளே ஒரு சவரன் 168 ரூபாய் அதிகரித்து 42,536 ரூபாய்க்கு விற்பனையானது. கிராம ஒன்றிற்கு 21 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.மேலும் அப்போது வெள்ளியின் விலையும் ஒரு கிராம் ரூ 75க்கு விற்பனையானது. மேலும் நேற்று முன்தினம் 18 கேரட் ஆபரத் தங்கத்தின் விலை கிராம் ஒன்று 4346 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று காலை ஒரு கிராம் 18 கேரட் ஆபரத் தங்கத்தின் விலை ஒன்பது ரூபாய் குறைந்து ரூ.4337 ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும் சென்னையில் நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து விற்பனையான. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமின் விலை 35 ரூபாய் உயர்ந்துள்ளது. அதனால் ஒரு கிராம் 5325 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல் ஒரு சவரனுக்கு 250 ரூபாய் உயர்ந்து ரூ 42,600 விற்பனையாகின்றது.