அதிரவைக்கும் சம்பவம்!! ஏரிக்குள் பாய்ந்த கார்!! ஐடி ஊழியர்கள் பலி!!

0
141
Shocking incident!! The car plunged into the lake!! IT employees killed!!
Shocking incident!! The car plunged into the lake!! IT employees killed!!

Krishnagiri: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஐடி ஊழியர்கள் சென்ற கார் ஏரியில் மூழ்கி பலி எண்ணிக்கை உயர்வு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உழவர் சந்தை அருகே உமாசங்கர்  நகரை சேர்ந்தவர் ரவி. அவரின் மகன் தான் மகேஷ். இவருக்கு வயது 25.  இவர் பெங்களூர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதே போல் ஓசூர் ஆவலபள்ளி ஜி.கே.டி. நகரை சேர்ந்தவர் லிண்டோ இவருக்கு வயது 25.  மேலும் சின்ன ஏலசகிரியை சேர்ந்தவர் யோக்கேஸ்வரன் வயது 25.

இந்த மகேஷ், லிண்டோ, யோகேஸ்வரன்  ஆகிய மூவரும் நண்பர்கள். தீபாவளி பண்டிகையை வைத்து வெளியூர் செல்வது, சுற்றுலா செல்வது, என பலரும் பயணத்தை விரும்பி செல்கிறார்கள். அதே போல் தன கடந்த அக்டோபர் 30 தேதி காரில் இருந்து வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் ஓசூர் அருகே வெங்கடாபுரம் ஏரிக்கரையில் இரவு 9.30 மணியளவில் லிண்டோ என்பவர் கார் ஓட்டி சென்றுள்ளார்கள்.

அப்போது கார் லிண்டோ என்பவரின் கட்டுபாட்டை இழந்து ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. அதில் மகேஷ், லிண்டோ, யோகேஸ்வரன்  ஆகிய மூவரும் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை தகவல் அறிந்து வந்த போலீசார் ஏரியில் மூழ்கிய காரை மீட்டனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மூன்று பேரும் இறந்து பிணமாக கிடந்துள்ளார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஒரு சின்ன தீப்பொறி தான் !! ஒட்டுமொத்த கம்பெனியும் கருகி நாசம்!!
Next articleசிவகாசியில் இந்த ஆண்டு ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை!!