தடுப்பூசியா தயாரிக்கிறிங்க? நிறுவனத்திற்க்குள்ளேயே புகுந்த கொரோனா!

Photo of author

By Sakthi

தற்போது உள்ள சூழலில் நோய்த் தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு மிக தீவிரமாக உலகம் முழுவதும் இருந்து வருகிறது. உலகில் பல நாடுகள் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்த இயலாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் உலகம் முழுவதும் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் மத்திய மாநில அரசுகள் இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தடுப்பூசி போடும் பணியும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.ஆனால் இந்தநோய் தொற்றின் முதல் அலை வீசிய போது பொது மக்களிடம் இருந்த விழிப்புணர்வு தற்சமயம் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக அரசின் எச்சரிக்கையை பொதுமக்கள் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை.

இதன் காரணமாகவே, இந்த நோய்த் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது ஆனாலும் மத்திய மாநில அரசுகள் நோய்த்தொற்று தடுப்பு வழி முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் அதனை பொதுமக்கள் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை.அதன் விளைவாக இன்று இந்தியா இந்த நோய்த் தொற்றின் பாதிப்பில் உலக நாடுகள் மத்தியில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்தியாவில் தற்சமயம் கோவில் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த தடுப்பூசியை தயார் செய்து வருகின்றது. ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயார் செய்து வருகின்றது.

இப்படியான சூழலில் நோய்த்தொற்று தடுப்பூசி தயார் செய்யும் பயோடெக் நிறுவனத்தில் பணிபுரியும் 50 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சி தரும் விதமாக இருக்கிறது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரையும் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.