Breaking News

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்! நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! 

Shocking information for alcoholics! Holiday for Tasmac shops for four days!

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்! நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி அன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கர் தேவர் நினைவிடத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பலர் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருவது வழக்கம். இதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வருகை புரிவதால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

அதுமட்டுமின்றி தேவையற்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.அத்தோடு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுப்பு அளித்துள்ளனர். இதுகுறித்து இராமநாதபுரம் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கூடுதல் நடவடிக்கையையும் மாவட்ட ஆட்சியர்கள்  மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மது கடைகள் மூடப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதற்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 28 முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை மது கடைகள் செயல்படாது என உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதேபோல சிவகங்கை மாவட்டத்திலும் மருதுபாண்டியார் நினைவு நாளை முன்னிட்டு மது கடைகள் ஏதும் செயல்படாது என தெரிவித்துள்ளனர். ஆனால் எத்தனை நாட்கள் செயல்படாது என்று விவரங்கள் ஏதும் தற்பொழுது வரை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வெளியிடவில்லை.

Leave a Comment