சிபிஎஸ்சி பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளை கேட்கக்கூடாது என்று மதுரை கிளை உயர் நீதிமன்றம் ஆனது தெரிவித்திருக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் இது குறித்து தீர்ப்பு வழங்கும் பொழுது தமிழில் எழுத படிக்க தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களாக பணிபுரிய தகுதியற்றவர்கள் என தெரிவித்திருக்கின்றனர்.
அதாவது, 2018 ஆம் ஆண்டு மின்வாரிய இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் தேனி மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர். இவர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்று அரசு பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மொழி பாடத்தில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் இதை ஏற்க மறுத்த ஜெயக்குமார் அவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதியான சுவாமிநாதன் அவர்கள் தமிழ் மொழி பேசக்கூடியவர்கள் இந்த பணியில் தொடரலாம் என்றும் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தமிழக அரசு பணி கொடுப்பதில் தடை இல்லை என்றும் உத்தரவிட்டிருக்கிறார். இதனை எதிர்த்து மின்வாரியத்துறை சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளைகள் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கினை நீதிபதிகளான ஜெயச்சந்திரன் மற்றும் பூர்ணிமா அடங்கிய அமர்வு விசாரித்து தமிழ் அலுவல் மொழியாக இருக்கக்கூடிய தமிழகத்தில் தமிழ் எழுத படிக்க தெரிந்தால் மட்டுமே அரசு வேலையில் பயணிக்க முடியும் என்றும் அவ்வாறு தமிழில் எழுத படிக்க தெரியவில்லை என்றாலோ அல்லது சிபிஎஸ்சி பாடத்திட்டங்களில் பயின்றவர்கள் அரசு வேலைகளை கேட்க வேண்டாம் என்று தெரிவித்திருக்கின்றனர். இது சிபிஎஸ்இ யில் பயின்று அரசு வேலைக்காக காத்திருக்க கூடியவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது.