சி.பி.எஸ்.இ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இதனை யாரும் நம்பவேண்டாம்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அதனால் பள்ளி மட்டும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அப்போது பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்புகள் தொடங்கி தேர்வுகள் நடத்தப்படுகிறது.
மேலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தபட்டது.மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 24 ஆம் தேதி ,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்றது.இந்நிலையில் சி.பி.எஸ்.இ மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது.மேலும் ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து சி.பி.எஸ்.இ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் சி.பி.எஸ்.இ அதிகாரபூர்வ இணையதளமான www.cbse.gov.in ஐ போல hhtps://cbsegovt.com என்று சமூக விரோதிகள் இணையதளம் உருவாக்கி உள்ளனர்.அதில் சி.பி.எஸ்.இ பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வந்துள்ளது அதனை பதிவிறக்கம் செய்யவேண்டும் என்றால் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர்.
இது போன்ற குறுஞ்செய்தி வந்தால் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.மேலும் இணையதளத்தில் பணம் செலுத்த வேண்டாம் என்றும் அறிவித்துள்ளனர்.மேலும் சி.பி.எஸ்.இ. ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதற்கு நேரடியாக ஒருபோதும் பணம் கேட்பதில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.