பிரபலங்கள் தனது மன அழுத்த பாதிப்பு குறித்து வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! மக்களுக்கான தேசிய மனநல விழிப்புணர்வு!

Photo of author

By Parthipan K

பிரபலங்கள் தனது மன அழுத்த பாதிப்பை குறித்து வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! மக்களுக்கான தேசிய மனநல விழிப்புணர்வு!

நடிகர் நடிகைகள் என்று கூறினால் நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அவர்கள் நடித்த படங்கள் தான்.ஆனால் அவர்கள் தான் அதிகம் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என கூறப்படுகின்றது.இந்நிலையில் அவை பலருக்கு தெரிவதில்லை.இவ்வாறு கணக்குகெடுப்பின் போது நடிகை சமீரா ரெட்டி முதல் சமந்தா வரை பல நடிகைகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சமீரா ரெட்டி:

சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக நடித்தவர்.இவர் இவருடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதையே தனக்கு சாதகமாக கொண்டவர்.ஆனால் இவருக்கு முதல் குழந்தை பிறந்தவுடன் உடல் கட்டுகோப்பை இழந்தார்.அதனால் இவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.தற்போது அவருடைய கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் உதவியுடன் அதிலிருந்து மீண்டு வந்தார்.இவர் தற்போது அவருடைய குடும்பத்துடன் கோவாவில் வாழ்ந்து வருகின்றார்.இப்போதெல்லாம் இவர் எதனை பற்றியும் கவலை கொள்வதில்லை என கூறியுள்ளார்.

சமந்தா:

இவர் முன்னணி நடிகையில் ஒருவராக வலம் வருகின்றார்.அண்மையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கத்தீஜாவாக நடித்துள்ளார்.ரசிகர்கள் மனதை வென்ற இவருக்கு சொல்ல முடியாத அளவிற்கு மன கவலை இருந்துள்ளது.2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கரம் பிடித்தார்.திருமணமாகி நான்கு ஆண்டுகளிலேயே இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர்.

அதனால் அதிக மன வேதனையில் இருந்த இவர் தொடர்ந்து படங்கள் நடித்து அதில் இருந்து வெளியே வர முயற்சி செய்துள்ளார். மேலும் இவர் கூறுகையில் மன அழுத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவ உதவியை பெற வேண்டும்.தனக்கு மன அழுத்தத்தில் இருந்து வெளிவர கவுன்சிலிங்கும் நண்பர்களும் உதவியாக இருந்தனர் என கூறியுள்ளார்.மன அழுத்தம் பற்றி சரியான விழிப்புணர்வு இருந்தால் போதும் அதிலிருந்து மீண்டு வரலாம் எனவும் கூறியுள்ளார்.