நெட்பிளிக்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பாஸ்வேர்டு பகிர கூடுதல் கட்டணம் வசூல்!

0
199
Shocking information released by Netflix! Charge extra for password sharing!
Shocking information released by Netflix! Charge extra for password sharing!

நெட்பிளிக்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பாஸ்வேர்டு பகிர கூடுதல் கட்டணம் வசூல்!

கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து நெட்பிளிக்ஸ் பயனாளர்கள் அவர்களுடைய பாஸ்வேர்டுகளை பிறருடன் பகிர்ந்து கொண்டனர்.அதற்காக தனிகட்டணம் வசூல் செய்யப்படும் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் அவர்களின் பங்குதாரர்களுக்கு கடிதம் அனுப்பியது.

அந்த கடிதத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடவுச்சொல் பகிர்வதைத் தடுக்கும் திட்டத்தை கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. அதனால் மிகப்பெரிய அளவிலான பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில்   வாடிக்கையாளர்கள் அவர்களுடைய வீட்டில் உள்ள நபர்களை தவிர மற்றவர்களுடன் கடவுச்சொல்லை பகிர்ந்தால் அதற்கென தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை அறிமுகம் படுத்தப்படும் என்று இந்த வாரம் தெரிவித்தது.

இந்நிலையில் நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் அவர்களின் வீட்டை தவிர நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பாஸ்வேர்டை பகிர்ந்தால் அதற்கென தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.முன்னதாகவே கடவுச்சொல்லை பகிர்ந்து கொள்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என்ற முறை கோஸ்டா ரிகா ,சிலி ,பெரு உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆண்டின் முதலிலேயே அறிமுகம் செய்துவிட்டனர்.

அந்த வகையில் ஒரு வாடிக்கையாளர் கூடுதலாக 2.99 டாலர் கட்டணமாக செலுத்தி கடவுச்சொல்லை இரண்டு நபருடன் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.மேலும் இதர நாடுகளில் உள்ள நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் எவ்வளவு கட்டணம் செலுத்தினால் பாஸ்வேர்டு பகிர்ந்து கொள்ள முடியும் என்பதை அறிவிக்கவில்லை அதற்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous articleகச்சாஎண்ணெய் நிறுவனம்: லாபத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல் தானே அனுபவிப்பது நியாயமற்றது – பாமக நிறுவனர் ராமதாஸ்!
Next articleஆர் எஸ் எஸ் பேரணி நடத்த தடை? முதல்வருக்கு பறந்த அவசரக் கடிதம்!