மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! நாடளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Photo of author

By Parthipan K

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! நாடளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Parthipan K

Updated on:

Shocking information released by the central government! The information released by the minister in Parliament!

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! நாடளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மூலமாக உணவு தானியங்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் ரேஷன் கார்டுகளுக்கு பயனாளிகளுக்கு தகுந்த சலுகைகளையும் உள்ளடக்கி இருப்பதால் ஐந்து வெவ்வேறு வகையான ரேஷன் கார்டுகள் NFSA மற்றும் TPDS ன் அடிப்படையில் வழங்கபடுகிறது.

இந்நிலையில் நாடளுமன்றத்தில் மத்திய அரசு கூறுகையில் நாடு முழுவதும் 55 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் தமிழகத்தில் தற்போது வரை 75 ஆயிரத்து 689 போலி ரேஷன் கார்டு கண்டுபிடிக்கபட்டுள்ளது என மத்திய அமைச்சர் சத்வி நிரஞ்சன் ஜோதி நாடளுமன்றத்தில் கூறியுள்ளார்.

மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 921175 ரேஷன் அட்டைகளும்,பீகார் மாநிலத்தில் 426865 ரேஷன் அட்டைகளும் கண்டுபிடிக்கபட்டுள்ளது.அதனை தொடர்ந்து ரேஷன் கார்டுகள் வகைபடுத்தப்பட்டுள்ளது.

PHH முன்னுரிமை குடும்ப அட்டை:

இந்த அட்டையானது அந்தந்த மாநில அரசுகளால் நிர்ணயிக்கப்பட்ட தகுதி அளவு கோள்களை கொண்டு குடும்பங்களுக்கு வழங்கபடுகிறது.மேலும் இந்த அட்டையின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் தலா ஒரு நபருக்கு ஐந்து கிலோ உணவு தானியங்களை பெற உரிமை வழங்கப்பட்டுள்ளது.

AYY அந்த்யோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டு:

இந்த ரேஷன் கார்டு வைத்துள்ள ஒவ்வொரு குடும்பமும் மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியங்கள் பெறலாம்.

APL ரேஷன் அட்டை:

இந்த அட்டையானது வறுமை கோட்டிற்கு மேல் வாழும் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றது.

BPL ரேஷன் கார்டு:

இந்த அட்டை வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.

AY அன்னபூர்ணா யோஜனா ரேஷன் அட்டை:

இந்த அட்டையானது ஏழை மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வழங்கபடுகிறது.