மதுபானம் விற்பனையாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்! இனி இவ்வாறு செய்தால் அபராதம் தான்! 

Photo of author

By Parthipan K

மதுபானம் விற்பனையாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்! இனி இவ்வாறு செய்தால் அபராதம் தான்!

தமிழகம் முழுவதும் மாதுபானங்கள் பல்வேறு முறையில் விற்பனை செய்யப்படுகின்றது.அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனம் மூலமாகவும் சில்லறை விற்பனை கடைகள் மூலமும் மதுபானம் விற்பனையாகின்றது.அவ்வாறு விற்பனை செய்யப்படுவதில்லை பீர் ,பிராந்தி ,விஸ்கி போன்ற மதுபானங்கள் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஒரு பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதல் பணம் வைத்து விற்பனை செய்தால் மொத்தம் 5900 ரூபாயும் ,7 ரூபாய் கூடுதலாக பணம் வைத்து விற்பனை செய்தால் 8260 ரூபாயும் ,10 ரூபாய் கூடுதலாக பணம் வைத்து விற்பனை செய்தால் 11800 ரூபாய் அபராதமும் வசூல் செய்யப்படுகின்றது.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர் டாஸ்மாக் கடைகளில் அதிகம் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தால் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.அந்த கேள்விக்கு அதிகமாக வைத்து விற்பனை செய்வதை தடுக்க ஆய்வு நடந்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பத்து மாதங்களில் 29 மாவட்டங்களில் 4658 விற்பனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ 5 கோடிக்கு மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த 29 மாவட்டங்களில் அதிகமாக ஈரோடு மாவட்டத்தில் 397 விற்பனையாளர்களிடம் இருந்து ரூ 46 லட்சம் வசூல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்களில் 29 மாவட்டங்களுக்கு மட்டுமே தகவல் அளிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 9 மாவட்டங்கள் எந்த ஒரு முறையான பதிலும் தரவில்லை என கூறப்பட்டுள்ளது.