கரடியிடம் பெற்ற மகளை தூக்கிப்போட்ட தாய்! அதிர்ச்சி வீடியோ!

0
155

உஸ்பெகிஸ்தான் உயிரியல் பூங்காவில் உள்ள கரடியிடம் பெற்ற மகளை தாய் ஒருவர் தூக்கிப் போட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உஸ்பெகிஸ்தான் தலைநகர் டாஸ்கெட்ன்டில் உள்ள உயிரியல் பூங்காவில் ஜூஜூ என்ற செந்நிற கரடி உள்ளது. இதனைக் ஏராளமான மக்கள் பார்த்துச் செல்கின்றனர். இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி 3 வயது மகளுடன் பெண் ஒருவர், பூங்காவுக்கு சென்றார்.

கரடி இருக்கும் இடத்தில் பாதுகாப்பு இரும்பு வளையத்தை தாண்டி தனது மகளை பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, கரடி அருகில் வந்ததும் திடீரென குழந்தையை அதனிடம் தூக்கிப் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குழந்தையை தூக்கிச் சென்ற கரடி, அருகில் உள்ள தனது இடத்திற்கு இழுத்துச் சென்றது. இதைக் கண்ட பூங்கா ஊழியர்கள் 6 பேர் உடனடியாக கரடி இருக்கும் இடத்திற்கு சென்று, குழந்தையை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்வாய்ப்பாக சிறு காயங்கள் மட்டுமே சிறுமிக்கு ஏற்பட்டது. சிறு காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெற்ற குழந்தையை கரடியிடம் வீசியெறிந்த தாயை பிடித்த பூங்கா ஊழியர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தையை எதற்காக கரடியிடம் தூக்கிப் போட்டார் என்பதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை என்ற காவல்துறையினர்,  அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டால், 15 ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும் என்றனர்.

பெற்ற தாயே குழந்தையை, கரடியிடம் தூக்கிப்போட்டுவிட்டு, சிறிதும் சலனம் இன்றி, நின்று வேடிக்கை பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதலைமறைவான பிரதமருக்கு கொரோனா! அதிர்ச்சியில் கனடா மக்கள்!
Next articleநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுக போட்ட அதிரடி வியூகம்! கதறும் எதிர்க்கட்சிகள்!