இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தகவல்!! மீண்டும் உயரும் பால் விலை.. வெளிவந்த புதிய தகவல்!
ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்தியதை அடுத்து தனியார் நிறுவனங்களும் தங்களின் பால் விலையை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் சில தனியார் நிறுவனங்கள் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் முடிந்ததை அடுத்து மக்களுக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் பால் விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அறிக்கையை பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஆந்திராவை சேர்ந்த தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா உள்ளிட்டவை நாளை முதல் பால் விலையை உயர்த்துவதாக கூறியுள்ளனர்.
பால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் இவ்வாறு பாலின் விலையும் உயர்ந்துள்ளது என இந்த நிறுவனங்கள் கூறுவது பொய்யான சாக்கு என தெரிவித்துள்ளார். ஆவின் பால் விலை உயர்த்தப்பட்ட பிறகு தனியார் நிறுவனங்கள் அவர்களின் வசதிக்கேற்ப ஓராண்டில் நான்கு முறைக்கும் மேல் பால் விலையை உயர்த்தி உள்ளனர்.
மக்களின் அன்றாட தேவையாக இருக்கும் பாலானது இவ்வாறு விலை உயர்ந்து கொண்டே போனால் பாமர மக்கள் வாங்கி கூட உபயோகிக்க முடியாமல் போகும் சூழல் உண்டாகும்.
தமிழக அரசோ ஆவின் நிறுவனத்தை மட்டும் தான் நாங்கள் கண்டு கொள்வோம் என அனைத்து செயல்பாடுகளையும் அவ்வாறே செய்து வரும் பட்சத்தில், தனியார் நிறுவனங்கள் பால் விலை உயர்த்துவதை ஒருபோதும் கண்டிப்பது இல்லை.
பால் விலை உயர்வை கண்டும் காணாமலே அரசாங்கம் உள்ளது. அந்த வகையில் நாளை முதல் ஆந்திராவை சார்ந்த ஹெரிடேஜ் திருமலா ஜெர்சி உள்ளிட்ட நிறுவனங்கள் இரண்டு ரூபாய் வரை பால் விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு ஆந்திரா சார்ந்த பால் நிறுவனங்கள் விலையை உயர்த்தினால் தமிழகத்தில் உள்ள தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். இதனை தடுக்க அரசு தான் தனியார் நிறுவனங்களுக்கும் பால் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுள்ளார்.
அந்த வகையில் நாளை முதல் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் தற்ப்போது வரை 48க்கு விற்க்கப்பட்டு வந்த நிலையில் நாளை முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். அதேபோல தயிர் 72 ரூபாயிலிருந்து 74 க்கும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.