இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! கோதுமை மாவு ரூ 1500 க்கு விற்பனை!
பாகிஸ்தான் அரசானது கடன் மேல் கடன் பெற்று கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. நிதி பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் ஏற்பட்டதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகின்றது.அதனால் மக்கள் ஆபத்தை உணராமல் உறுதியான பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயுவை நிரப்பி செல்கின்றனர்.மேலும் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ஒரு சிலிண்டர் ரூ 10000 க்கு விற்பனை செய்யபடுகின்றது.அதனால் ரூ 900 ரூபாய்க்கு விற்கப்படும் பிளாஸ்டிக் பேக்குகளில் எரிவாயு நிலையங்களுக்கு சென்று எரிவாயு நிரப்பி வருகின்றனர்.
மேலும் மக்கள் கம்ப்ரசர் மூலமாக வீட்டில் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.இதுபோன்று பயன்படுத்தும் பொழுது எரிவாயு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டு மக்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் கோதுமை மாவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் கோதுமை மாவு கராச்சியில் ஒரு கிலோ 140 முதல் 160 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில் 10 கிலோ மாவு மூட்டை ரூ 1500 க்கும் மற்றும் 20 கிலோ மூட்டை ரூ 2800 க்கும் விற்பனை செய்யபடுகின்றது.மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மாவை பொட்டலங்களாக செய்து வருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது.இதில் குறைந்த விலையில் மாவு வாங்க முயன்றபொது கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் குறிப்பித்தக்கது.