டாஸ்மார்க் ஊழியர்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றால் இடைநீக்கம்!!

Photo of author

By Gayathri

டாஸ்மார்க் கடைகளில் மது பாட்டில்கள் 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அரசு புதிய திட்டம் ஒன்றினை அமல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஏற்கனவே மதுபானங்களை அதிக விலைக்கு விற்றால் அனைத்து பணியாளர்களும் இடைநீக்கம் செய்யப்படுவர் என்ற சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், டாஸ்மாக் தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்க உத்திர விடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளரான மோகன்ராஜ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :-

மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மட்டுமின்றி அந்தக் கடையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவர் என அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையானது முற்றிலும் சட்ட விரோதமானது என மோகன் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் இவர் மனுவில் கூறியிருப்பதாவது, டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 18 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 24,986 ஊழியர்கள் இதுவரையிலும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டும் இவர், பெரிய அளவில் வருமானம் பார்க்கக்கூடிய டாஸ்மாக் கடைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு குறைந்த அளவிலான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேபோன்று, காலணி ஆதிக்க காலத்தில் தான் ஒருவர் தவறு செய்தார் என்றால் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. அதனைப் போல் தற்பொழுதும் டாஸ்மார்க் ஊழியர்களுக்கு இதுபோல் ஒரு தண்டனை கொடுப்பது மிகவும் கண்டனத்திற்குரிய விஷயமாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர் தவிர அந்தக்கடையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் இடைநீக்கம் செய்யப்படுவர் என கடந்த அக்டோபர் 29ஆம் தேதி பிறப்பித்துள்ள சுற்று அறிக்கை சட்டவிரோதமானது என்றும், இதனை ரத்து செய்யும் வரை தடை செய்து வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்த வழக்கானது இன்று, நீதிபதி டி.பரதச்சக்ரவர்த்தி முன்பாக நடைபெற்றது.நீதிபதி, ”இந்த வழக்கில் டாஸ்மாக் தரப்பு விளக்கத்தை கோராமல் எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க இயலாது” எனக் கூறி விசாரணையை வரும் நவ.27-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.