TN Gov: தமிழக அரசு ரேஷன் அட்டை ரீதியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் இது ரீதியாக ஊழல் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. ரேஷன் கடை ஊழியர்கள் தமிழக அரசிடம் குறிப்பிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் இம்மாதம் தொடக்கத்திலேயே இரண்டு தினங்கள் இது ரீதியாக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் போராட்டம் நடத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.
இதனால் இம்மாதம் 22 23 மற்றும் 24 ஆம் தேதி தொடர் மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தப் போவதாக கூறியுள்ளனர். குறிப்பாக குடோன்களிலிருந்து எடுத்து வரப்படும் மூட்டைகளில் கணிசமான அளவில் எடை குறைகிறது. இதில் எங்கு தவறு நடக்கிறது என்று தெரியாமல் அதற்கு பாதுகாவலர்களின் மீது சந்தேகம் திரும்புகிறது. இதனையெல்லாம் சரி கட்ட கம்ப்யூட்டருடன் பொருந்திய எடை தராசை நிறுவுமாறு கேட்டு வருகின்றனர்.
மேற்கொண்டு கைரேகை பதிவு செய்ததுடன் அவர்களுடைய விவரங்களும் முழுமையாக வருவதில்லை. இந்த சர்வர் பிரச்சனையை சரி செய்யக் கோரியும் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். கம்ப்யூட்டருடன் பொருந்திய எடை தராசை நிறுவும் பட்சத்தில் நுகர்வோருக்கு சரியான அளவில் பொட்டலங்கள் மூலம் பொருட்கள் வழங்கப்படும். ஆனால் இதையெல்லாம் தமிழக அரசு சரி செய்வதில்லை எனக்கூறி இம்மாதம் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை முன் கூட்டியே பெறுவதன் மூலம் சிரமத்தை குறைத்துக்கொள்ள முடியும்.