UPI பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல்! இனி இவர்கள் யுபியை பயன்படுத்தினால் கட்டணம்!!

0
179
Shocking news for UPI users! Now if they use UP, they will be charged!!
Shocking news for UPI users! Now if they use UP, they will be charged!!

UPI பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல்! இனி இவர்கள் யுபியை பயன்படுத்தினால் கட்டணம்!!

இன்றைய நவீன உலகில் பணம் செல்லுவது மற்றும் பண பரிமாற்றம் செய்வது முன்பை விட எளிதாகிவிட்டது.இந்தியாவில் நீங்கு எங்கு சென்றாலும் கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.உங்களிடம் மொபைல் போன்,அதில் ஒரு UPI மற்றும் உங்கள் வங்கி கணக்கில் பணம் இருந்தால் போதுமானது.இந்த UPI நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா(NPCI) மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு இதை நடைமுறைப்படுத்தியது.

உங்கள் வங்கி கணக்குடன் UPI செயலியை இணைத்து விட்டால் ரொக்கமின்றி பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.கடைகளில் QR கோடு பயன்படுத்தி பணம் செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.இதன் காரணமாக UPI பேமெண்ட் வசதி இந்திய மக்களிடம் எளிதில் சென்று சேர்ந்து விட்டது.

இதனால் இந்தியா UPI பணப்பரிவர்த்தனை தொழிநுட்பத்தில் உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.அதேபோல் சில வங்கிகள் க்ரெடிட் கார்டுகளை UPI செயலியுடன் இணைப்பதற்கான அனுமதியை வழங்கி வருகிறது.இது வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளை UPI உடன் இணைத்து அவர்களின் கிரெடிட் லிமிட்டிற்கு ஏற்றார் போல் செலவு செய்து கொள்ள முடியும்.இதனால் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதை HDFC,BOB போன்ற வங்கிகள் ஊக்குவித்து வருகிறது.

மேலும் கிரெடிட் கார்டு மூலம் நாம் ரூ.2 ஆயிரத்திற்கு மேல் பணம் செலுத்தினால் அதற்கு எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்து வருவதால் அதற்கான கட்டணத்தை அதிகரிக்க வங்கிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இதனால் கிரெடிட் கார்டு பயன்படுத்தி UPI பணம் செலுத்துபவர்கள் இனி அதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வங்கி தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை.