வாட்ஸ் அப் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி இதில் நீங்கள் பயன்படுத்த முடியாது!

Photo of author

By Parthipan K

வாட்ஸ் அப் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி இதில் நீங்கள் பயன்படுத்த முடியாது!

தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரிடமும் ஆண்டிராய்டு செல்போன் உள்ளது அதன் மூலம்  பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் வாட்ஸ் அப் ஆனது பயணிகளின் வசதிக்கு ஏற்ப புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது.அந்த வகையில் குரூப் அழைப்பு பேச விரும்பினால் அதற்கென தனி லிங்க் உருவாக்கி பகிர்ந்து கொள்ளாலாம்.

அந்த இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் வீடியோ காலில் இணைந்து கொள்ளாலாம்.அதனை தொடர்ந்து நமக்கு நாமே மெசேஜ் செய்துகொள்ளும் விதமாக மெசேஜ் யூர்செல்ப் என்ற அம்சம் அமைந்துள்ளது.மேலும் அதனுடன் கல்வி,தொழில்,பண பரிமாற்றம் முதலான சேவைகளை வாட்ஸ் அப் வழங்கி வருகின்றது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே வாட்ஸ் அப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகம் படுத்தி வருகின்றது.இவ்வாறு வாட்ஸ் அப் வழங்கி வரும் புதிய அப்டேட்கள் பழைய போன்களில் பல சமயங்களில் வேலை செய்வதில்லை.

அந்தவகையில் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் 49 போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐபோன் 5,சாம்சங் கேலக்ஸி 3 ஆகிய முக்கிய போன்கள் இதில் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எல்ஜி,லெனோவோ,ஹீவாவேய் உள்ளிட்ட சில முன்னணி போன்களும் இதில் அடங்கும் என தெரிவித்துள்ளனர்.