விமான போக்குவரத்து உலகளவில் முக்கிய தளமாக இருக்கும் சூழலில், கோஸ்டா ரிக்காவில் நடந்த பயங்கர விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மத்திய அமெரிக்காவின் மவுண்ட் பிகோ பிலன்கோ மலைப் பகுதியில் 6 பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் மலை மீது மோதி சுக்கு நூறானது. பயணிகள் நிலை குறித்து இது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை, இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் நிலை விசாரணையின் படி, இந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலை மீது மோதியிருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு குழுவினர் பணி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அதிர்ச்சி என்னவெனில், விபத்து நடந்த இடத்தில் பயணிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. விமானம் வெடித்துச் சிதறியதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விபத்து சம்பவம் வெளியாகியதுடன், மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. அவர்கள் விமானத்தின் சிதைவுகளை மட்டுமே கண்டுபிடித்துள்ளனர். தற்போது பயணிகளின் நிலை குறித்து மர்மம் நீடிக்கிறது. விபத்துக்கான துல்லியமான காரணம் அடையாளம் காண அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கோஸ்டா ரிக்கா விபத்து மட்டுமல்லாமல், உலகெங்கும் விமான விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் செல்போன் கோபுரம் மீது ஹெலிகாப்டர் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்தியாவிலும் போர் விமானங்கள் பயிற்சியின்போது விபத்துக்குள்ளாகிய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்துள்ளன.
விமானப் போக்குவரத்து துல்லியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இத்தகைய விபத்துக்கள் கேள்விக்குறிகளை எழுப்புகின்றன.