அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு… எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் சுட்டு கொலை… நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்…
தென் அமெரிக்க நாடான ஈக்விடார் நாட்டில் எதிர்கட்சியின் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ அவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஈக்விடார் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
தென் அமெரிக்காவில் ஈக்விடார் நாடு உள்ளது. இங்கு சமீபத்தில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈக்விடார் நாட்டில் அதிபர் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த அதிபர் தேர்தலில் மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
அந்த 8 வேட்பாளர்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளராக ஈக்விடார் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பத்திரிக்கையாளராகவும் உள்ள பெர்னாண்டோ வில்லவிசென்சியோ அவர்கள் இருக்கிறார்.
நேற்று அதாவது ஆகஸ்ட் 9ம் தேதி புதன் கிழமை கிட்டோ நகரில் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தை முடித்துவிட்டு பெர்னாண்டோ வில்லவிசென்சியோ அவர்கள் காரில் ஏறச் சென்றார்.
அப்பொழுது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எதிர்கட்சியின் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ அவர்களூ நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதில் படுகாயம் அடைந்த வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடையாளம் தெரியாத நபர் நடத்திய இந்த துப்பாக்கி சூட்டில் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ அவர்களின் பாதுகாவலர்களும் காயமடைந்தனர்.
வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ மறைவிற்கு ஈக்விடார் நாட்டின் அதிபரும் மற்றும் சக வேட்பாளர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் அதிபர் வேட்பாளர் சுட்டு கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் எழுந்து வருகின்றது.