விஜய் சேதுபதியால் தள்ளிப்போகும் ஷூட்டிங்!! கடுப்பில் வெற்றிமாறன்!!

Photo of author

By CineDesk

விஜய் சேதுபதியால் தள்ளிப்போகும் ஷூட்டிங்!! கடுப்பில் வெற்றிமாறன்!!

சினிமா உலகத்தில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெற்றி மாறன். இவருடைய படங்கள் எப்போதும் சிறந்தவையாகவே இருக்கும் அதனாலே இவருடைய படங்கள் தேசிய விருதை பெற்றுள்ளது.

இவருடைய படங்களில் ஒன்று தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெளி வந்த விடுதலை. இது மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இதன் வகையில் படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளி வரும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இரண்டு பாகத்திற்கும் சூட்டிங் முடிந்து விட்டதாகவும் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் சில காட்சிகள் எதார்த்தமாக இருக்க இன்னும் இரண்டு வாரம் சூட்டிங் நடத்த வெற்றி மாறன் முடிவு செய்துள்ளார். நடிகர் சூரி யிடம் நடிப்பதற்கு தேதிகள் வாங்கிவிட்டார்கள் என்றும் ஆனால் நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் படங்களில் நடித்து கொண்டிருப்பதால் அவரால் இப்போது விடுதலை 2 ல் நடிக்க வர முடியாது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

படத்தின் பட்ஜெட் அதிகமாக இருக்கும் நிலையில் விஜய் சேதுபதி வந்ததும் சூட்டிங் ஆரம்பிக்கலாம் என்று வெற்றி மாறன் தனது அடுத்த படத்தை பார்க்க சென்று விட்டார்.

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரியா நடிப்பில் வெளி வரவிருக்கும் வாடிவாசல் படத்திற்கு ரசிகர்கள் பெரும்பாலும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே வாடிவாசல் படத்தின் பாதி சூட்டிங்கை முடித்து விட்டு விடுதலை படத்தின் வேலைகளை அவர் ஆரம்பிப்பதாக தகவல் வெளி வந்துள்ளது.

அதாவது விடுதலை முதல் பாக கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் இரண்டாம் பாகம் அமையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.