திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் பாதியில் நின்ற ஷூட்டிங்!! கவலையில் தயாரிப்பாளர்!!

Photo of author

By CineDesk

திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் பாதியில் நின்ற ஷூட்டிங்!! கவலையில் தயாரிப்பாளர்!!

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படம் அண்மையில் படப்பிடிப்பு முடிந்து வெளியிட தயாராக இருந்த நிலையில் தற்போது அந்த படத்தில் சில காட்சிகள் படமாக்க படாமல் இருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம் மேற்கொண்டார். மேலும் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.

இதைத் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு பாதி முடியாமல் உள்ள நிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் படக்குழுவினர் அனைவரும் மீதி படப்பிடிப்புக்காக மேற்கு வங்கம் சென்றுள்ளனர். இந்த பயணம் இன்று தான் ஆரம்பித்தது இந்த நிலையில் நாடு முழுவதும் கனமழை தீவிரமாக பெய்து வருவதன் காரணமாக அந்த படத்தின் ஷூட்டிங் தேதி மேற்கு வங்கத்தில் தள்ளி சென்றுள்ளது. மேலும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளதாகவும் அந்த பட குழு அறிவித்துள்ளது