என் உடலை விற்று தான் சினிமா வாய்ப்பு பெற வேண்டுமா!! நடிகை ஆதங்கம்!!

Photo of author

By Gayathri

சினிமாவில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசைதான். அதற்காக என் உடலை வெற்றி தான் நடிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் எனக்கு கிடையாது என தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார் நடிகை ரெஜினா காசன்ட்ரா.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது பாலிவுட்டில் நடிகையாக களம் இறங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாலிவுட் குறித்து இவர் பேசும் பொழுது, தமிழ் சினிமா துறையில் நடிக்க வேண்டும் என்றால் எந்த மொழியும் தெரிந்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதில்லை. ஆனால் பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்றால் நடிகர் நடிகைகளுக்கு கட்டாயம் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரையில் படம் எடுத்து முடித்த பின் நடிகர்களுக்கு வேறு யாராவது ஒருவர் டப்பிங் பேசிக் கொள்ளலாம். ஆனால் ஹிந்தி திரைப்படங்களில் நேரடியாகவே வசனங்களை ரெக்கார்ட் செய்து கொள்கின்றனர். நல்லவேளை ஆக என்னுடைய தாயார் என்னை ஹிந்தி படிக்க கட்டாயப்படுத்தினார். நான் இரண்டாம் வகுப்பிலிருந்து இரண்டாவது மொழியாக ஹிந்தியை தேர்வு செய்து படித்தேன் என்றும் தன்னுடைய சொந்த அனுபவத்தை பகிர்கிறார் நடிகை ரெஜினா அவர்கள்.

மேலும் இவர் கூறுகையில் பல திரைப்படங்கள் பெண்களுடைய முன்னேற்றத்தை பற்றி கூறுகின்றன. அதனை எத்தனை பேர் விரும்பி பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. பல தடைகளை தாண்டி வெளியில் வந்து சாதிக்கும் பெண்கள் பலர் உள்ளனர். எனக்கு அது போன்ற படங்களில் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பெண்கள் முன்னேற்றம் குறித்து எடுக்கப்படும் படங்களில் நடிக்க நான் ஆசைப்பட்டாலும், எனக்கு ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு வாய்ப்புகள் வருகின்றன. எனினும் நான் அதனையும் மறக்காமல் அதிலும் நடித்துதான் வருகிறேன். ஐட்டம் டான்சில் நடிப்பதனால் மார்க்கெட்டில் விலை போகாத நடிகை என்றோ அல்லது வேறு விதமாகவோ நினைத்தால் அதனை நான் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டேன் என்றும் அது குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருப்பேன். என்னை யாரும் காட்சி பொருளாக பார்க்கும்படி நான் இருக்கவும் மாட்டேன் பார்க்க விடவும் மாட்டேன். அதுமட்டுமின்றி என்னுடைய உடலை விற்று நான் சினிமா துறையில் நடிக்க வேண்டும் என எந்த அவசியமும் எனக்கு இல்லை என்று கோபமாக கூறியிருக்கிறார் நடிகை ரெஜினா அவர்கள்.