உங்க வீட்டுப்பக்கம் பாம்பே வரக் கூடாதா? அப்போ இந்த பொருட்களை தண்ணீரில் கலந்து தெளியுங்கள்!!

Photo of author

By Divya

உங்க வீட்டுப்பக்கம் பாம்பே வரக் கூடாதா? அப்போ இந்த பொருட்களை தண்ணீரில் கலந்து தெளியுங்கள்!!

வீரனோ,கோலையோ யாராக இருந்தாலும் திடீரென்று பாம்பை கண்டார்கள் என்றால் ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி தான் போவார்கள்.என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றுவிடுவது மனிதர்களின் இயல்பு தான்.ஆனால் இந்த சமயத்தில் தான் நாம் பதட்டமடையாமல் பாம்பை விரட்ட வேண்டும்.

உலகில நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே உங்கள் வீட்டிற்கு அடிக்கடி பாம்பு வருகிறது என்றால் அலட்சியம் கொள்ளாமல் அதன் வருகையை தடுப்பதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.சில பாம்புகள் விஷத்தன்மை உடையவையாக இருக்கும்.சில பாம்புகள் விஷத்தன்மை அற்றவையாக இருக்கும்.எந்த பாம்பாக இருந்தாலும் அதை அடித்துக் கொள்ளாமல் சில பொருட்களை கொண்டு எளிதில் விரட்டிவிட முடியும்

பாம்பை விரட்ட வழிகள்:

வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதன் மூலம் பாம்பு உள்ளிட்ட ஊர்வன விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதை தடுக்க முடியும்.

பூண்டு மற்றும் வெங்காயத்தின் வாடை பாம்பிற்கு ஆகாது.இந்த இரண்டு பொருட்களையும் அரைத்து தண்ணீரில் கலந்து வீட்டை சுற்றி ஸ்ப்ரே செய்தால் பாம்பு நடமாட்டம் கட்டுப்படும்.

அதேபோல் துளசி,பூண்டு,சின்ன வெங்காயம்,பட்டையை அரைத்து தண்ணீர் கலந்து வீட்டை சுற்றி தெளித்து வந்தால் வீட்டிற்குள் பாம்பு வராது.

வீட்டில் குடோன் போன்று பொருட்கள் தேங்கி இருந்தால் விஷ ஜந்துக்கள் எளிதில் அண்டிவிடும்.எனவே வீட்டிற்குள் மற்றும் வீட்டை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும்.