ஒரு நபரின் பெயரில் பல மின் இணைப்பு இருக்க கூடாது? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின்நுகர்வோரும் அவர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் அனைத்தையும் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனால் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காததினால் மீண்டும் கால அவகாசம் நீடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அறிவிப்பு ஒன்று வெளியானது அந்த அறிவிப்பில் ஒரு வீட்டில் அல்லது ஒரு குடியிருப்பில் அல்லது ஒரு இடத்தில் இரண்டு மின் இணைப்புகள் இருந்தால் அதை மாற்றி ஒரு வீட்டிற்கு ஒரு இணைப்பு மட்டும் தர வேண்டும் என தகவல் பரவி வந்தது.
இதனால் 100 யூனிட் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்று இணைக்கவே ஆதார் மின் இணைப்பு நடந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.
மின்வாரிய துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி கூறுகையில் சமூக வலைதளங்களில் பேசப்படும் இந்த கருத்துக்கள் முற்றிலும் தவறானவை, உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்தோடு ஆதார் மற்றும் மின் இணைப்பு அவகாசம் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியினை கண்டு மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.