மாம்பழத்தை ஜூசாக குடிக்க கூடாதா! மாம்பழத்தின் நன்மைகள்!!

0
298
#image_title

மாம்பழத்தை ஜூசாக குடிக்க கூடாதா! மாம்பழத்தின் நன்மைகள்!

 

கோடை காலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். இந்த மாம்பழத்தை பிடிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். மாம்பழத்தில் கலோரிகள் அதிக அளவு இருப்பதால் டயட் மேற்கொள்பவர்கள் சாப்பிட தயங்குவார்கள். ஆனால் மாம்பழத்தை மிதமான அளவில் சாப்பிடும் பொழுது இது எடை குறைக்க உதவும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்த மாம்பழத்தின் நன்மைகள், இதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

மாம்பழத்தின் ஊட்டச்சத்துக்கள்;

 

இந்த மாம்பழத்தில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மாம்பழத்தை நாம் சாப்பிடும் பொழுது வைட்டமின் சி, வைட்டமி ஈ போன்ற பல சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கின்றது. மேலும் வைட்டமின் பி6, ஃபோலேட், இரும்புச்சத்து, மெக்னீசியம், நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன.

 

மாம்பழத்தின் நன்மைகள்;

 

மாம்பழத்தை நாம் சாப்பிடும் பொழுது நமக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பதுடன் கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் இது பயன்படுகின்றது.

 

* 100 கிராம் மாம்பழத்தை நாம் சாப்பிடும் பொழுது அதில் கிட்டத்தட்ட 36 மிலி கிராம் அளவிற்கு விட்டமின் சி நமக்கு கிடைக்கின்றது. இது நம் உடலுக்கு தினசரி கிடைக்கும் விட்டமின் ச அளவில் 67 சதவீதம் ஆகும். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மிக முக்கியமான ஊட்டச்சத்து விட்டமின் சி ஆகும்.

 

* மாம்பழத்தில் கலோரிகள் அதிகளவு உள்ளதால் இதை மிதமான அளவு எடுத்துக் கொள்ளும் பொழுது நம் உடல் எடையை குறைக்க இது பயன்படுகின்றது.

 

* மாம்பழத்தில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் இருக்கின்றது. நார்ச்சத்துக்கள் அதிகளவு உள்ள உணவுகளை சாப்பிடும் பொழுது வயிறு நிறைந்தது போல் இருக்கும் உணர்வை ஏற்படுத்தும். அது மட்டுமில்லாமல் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் செய்கின்றது.

 

* மாம்பழத்தை நாம் சாப்பிடும் பொழுது இதயம் ஆரேக்கியமாகவும், பலமுடனும் இருக்க உதவி செய்கின்றது.

 

* மாம்பழத்தில் அதிகப்படியான மெக்னீசியம், பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடன்ட் சத்துக்கள் இருப்பதால் இது இரத்தத்திலு உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகின்றது.

 

* செரிமானத்தை சீராக்க மாம்பழம் உதவி செய்கின்றது. மாம்பழம் ஜீரண சக்தியை ஈதிகரிக்க செய்து அஜீரணக் கோளாறை சரி செய்யும்.

 

* மாம்பழத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட் சத்துக்கள் உடலில் நார்ச்சத்துக்களை பிரித்தெடுத்து நம் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கின்றது.

 

* மாம்பழத்தை நாம் சாப்பிடும் பொழுது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைகின்றது.

 

பல சத்துக்கள் உள்ள மாம்பழத்தை சாப்பிடும் பொழுது கவனிக்க வேண்டியவை;

 

* மாம்பழத்தை நொறுக்கு தீனிகள் சாப்பிடும் நேரத்தில் அதற்கு பதிலாக சாப்பிடலாம்.

 

* சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழத்தை சாப்பிடக் கூடாது.

 

* மாம்பழத்தை சாப்பிடும் பொழுது இதில் கூடுதலான கலோரிகள் உள்ளது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும.

 

* இதை பழமாக சாப்பிடும் பொழுதுதான் நம் உடலுக்கு பல சத்துக்கள் கிடைக்கின்றது. மாம்பழத்தை ஜூசாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

 

Previous articleசெந்தில் பாலாஜி ராஜினாமா.. அமைச்சரவையில் புதிய மாற்றம்!! முதல்வரின் அடுத்த கட்ட நடவடிக்கை!!
Next articleஅதிரடியாக விளையாடிய நித்திஷ் ராஜகோபால்! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெல்லை அணி!!