அதிரடியாக விளையாடிய நித்திஷ் ராஜகோபால்! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெல்லை அணி!!

0
160
#image_title

அதிரடியாக விளையாடிய நித்திஷ் ராஜகோபால்! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெல்லை அணி!

 

நேற்றைய(ஜுன்14) டி.என்.பி.எல் போட்டியில் மதுரை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நித்திஷ் ராஜகோபால் அவர்களின் அதிரடி ஆட்டத்தால் நெல்லை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

நேற்று அதாவது ஜூன் 14ம் தேதி கோவையில் நடைபெற்ற டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது லீக் சுற்றில் செய்சம் மதுரை பேந்தர்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

இதையடுத்து முதலில் களமிறங்கிய மதுரை அணியின் பேட்ஸ்மேன்கள் நெல்லை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறினர். தொடக்க வீரர் எஸ் கார்த்திக் 1 ரன்னுக்கு  ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரர் ஹரி நிசாந்த்  சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து ரன் சேர்த்தார்.

 

சிறப்பாக விளையாடிய ஹரி நிசாந்த் அரைசதம் அடித்து மதுரை அணிக்கு 64 ரன்கள் சேர்த்தார். வாசிங்டன் சுந்தர் 19 ரன்களும், ஸ்நப்நில் சிங 14 ரன்களும், ஜெ கௌசிக் 12 ரன்களும் சேர்த்தனர். இதனால் மதுரை அணி 8 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களின் முடிவில் 126 ரன்கள் சேர்த்தது. நெல்லை அணியில் பந்து வீச்சில் சிறப்பாக பந்துவீசி மோகன் பிரசாத் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். எம் பொய்யாமொழி, சோனு யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளும், லக்சய் ஜெய் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

 

127 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் ஸ்ரீநிரஞ்சன் மற்றும் அருண் கார்த்திக் இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய அருண் கார்த்திக் 12 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க மற்றொரு தொடகக வீரர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய நித்திஷ் ராஜகோபால் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க ஆரம்பித்தார். கடைசி வரை அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 42 ரன்கள் குவித்து நெல்லை அணியின் வெற்றிக்கு உதவினார்.

 

நித்திஷ் ராஜகோபாலின் அதிரடி ஆட்டத்தால் நெல்லை அணி 127 ரன்கள் என்ற இலக்கை 13.4 ஓவர்களில் அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெல்லை அணியில் சோனு யாதவ் 13 ரன்களும், எஸ்.ஜே அருண் குமார் 11 ரன்களும், அஜிதேஷ் குருசுவாமி 14 ரன்களும் சேர்த்தனர். மதுரை அணியின் பந்து வீச்சில் பாலு சூர்யா, தேவ் ராகுல, வி கௌதம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

 

நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் திண்டுக்கல் அணியும், திருச்சி அணியும் விளையாடியது. முதலில் பேட் செய்த திருச்சி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் சேர்த்தது. 121 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய திண்டுக்கல் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 14.5 ஓவரில் 122 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.