டி 20 உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவாரா?… முன்னாள் வீரர் கருத்து!

0
151

டி 20 உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவாரா?… முன்னாள் வீரர் கருத்து!

இந்திய அணியின் இளம் வீரர்களில் நம்பிக்கை அளிப்பவராக இருப்பவர் ஸ்ரேயாஸ் ஐயர்.

ஐபிஎல் தொடர் மூலமாக இந்தியாவுக்குக் கிடைத்த சிறந்த மிடில் ஆர்டர் வீரர்களில் ஒருவராக இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர். சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு தேர்வாகியும், டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டும் வளர்ச்சி பாதையில் சென்ற அவருக்கு கடந்த சில மாதங்கள் சறுக்கல்களாக அமைந்துள்ளன.

காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர் பின்னர் போராடி அணிக்குள் வந்தார். ஆனால் நிரந்தரமான இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. டி 20 போட்டிகளில் தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோரோடு அவர் போட்டி போட வேண்டிய சூழலில் உள்ளார்.

ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. ஆனால் ஸ்டாண்ட்பை வீரராக உள்ளார். இதனால் இனி அவர் டி 20 போட்டிகளில் மீண்டும் இடம்பிடிப்பாரா, டி 20 உலகக்கோப்பையில் விளையாட அவருக்கு வாய்ப்புண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது சம்மந்தமாக பேசியுள்ள வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா “நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு ஷ்ரேயாஸ் ஐயரின் சர்வதேச புள்ளிவிவரங்கள் சிறப்பாக உள்ளன. அவர் ஆசியக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பைப் பெறவில்லை. ஆனால் அவர் முழுவதுமாக போட்டியில் இருந்து விலகிவிடவில்லை. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, அவர் 17 ஆட்டங்களில் பங்கேற்றார், கிட்டத்தட்ட 40 சராசரி மற்றும் 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 479 ரன்கள் எடுத்தார். அவர் இன்னும் ஓட்டத்தில் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.” எனக் கூறியுள்ளார்.

Previous articleகண்ணிமைக்கும் நேரத்தில் மகன் கண்முன்னே   40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து தந்தை பலி !..
Next articleதனியார் உணவு டெலிவரி ஊழியிருக்கும் மர்ம  கும்பலுக்கும் இடையே நடந்தது என்ன? போலீசார் தீவிர விசாரணை!