ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தம் ஆன ஸ்ருதிஹாசன்…!

Photo of author

By Vinoth

ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தம் ஆன ஸ்ருதிஹாசன்…!

Vinoth

ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தம் ஆன ஸ்ருதிஹாசன்…!

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு படங்களில் அதிக கவனம் காட்டி நடித்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிகாசன் 3 படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.இவர் ஒரு பின்னணி பாடகி.ஸ்ருதி இசை மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். 3 மற்றும் ஏழாம் அறிவு போன்ற படங்கள் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

மேலும் அடுத்தடுத்த படங்களில் விஜய் ,அஜீத் ,விஷால் உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்து வந்தவர். இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார்.பின் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. தற்போது இவர் மும்பையில் நிரந்தரமாக தங்கி விட்டார். மேலும் இவர் பூனையுடன் விளையாடு வீடியோக்கள் மற்றும் அடிக்கடி சமையல் செய்து போட்டோ சூட்  செய்தும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார்.

இந்நிலையில் இப்போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி ஆகியோரோடு நடித்து வரும் அவர் சலார் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தி ஐ என்ற ஹாலிவுட் சைக்காலஜி த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதை அவர் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் நடிகர் மார்க் ரோலி உள்ளிட்ட ஹாலிவுட் கலைஞர்கள்  பணியாற்றுகின்றனர்.