அப்பாவுடன் கூட்டணி போட்ட மகள்!!

Photo of author

By CineDesk

அப்பாவுடன் கூட்டணி போட்ட மகள்!!

CineDesk

Updated on:

அப்பாவுடன் கூட்டணி போட்ட மகள்!!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களது மகளான ஸ்ருதிஹாசன்  ஒரு சிறந்த நடிகை,மற்றும் பாடகி ஆவர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் ஸ்ருதிஹாசன் இது ஒரு புதிய இசைப்படைப்பினை படைக்கவுள்ளார் என்று சில மாதங்களுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை கேட்டதும் ஏராளமான ரசிகர்கள் இதற்கான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் ஸ்ருதிஹாசன், அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கேள்வி கேட்கலாம்” ( ask me a question) என்ற அமர்வை தொகுத்து வழங்கினார்.

அந்த கேள்வியில் ரசிகர் ஒருவர் அப்பாவுடன் இணைந்து பணியாற்றும் இசை படைப்புகள் குறித்து ஏதேனும் அப்டேட் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

அக்கேள்விக்கு பதிலாக அது ஒரு மியூசிக்கல் ப்ராஜெக்ட் என்றும், அதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை விரைவில் வழங்குகிறேன் என்று உற்சாகத்துடன் அவர் தெரிவித்திருந்தார்.