நண்பரின் இறப்பில் கிடைத்த இழப்பீடு தொகை 30 லட்சத்தை அபேஸ்  செய்த எஸ்ஐ! வங்கி சென்ற குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
201
SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!
SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

நண்பரின் இறப்பில் கிடைத்த இழப்பீடு தொகை 30 லட்சத்தை அபேஸ்  செய்த எஸ்ஐ! வங்கி சென்ற குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி தளவாய்புரத்தைச் சேர்ந்த மகாராஜன் என்பவரது மகன் திரு. சந்திர சுபாஸ்/ 27 .கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறைக்கு பணியில் சேர்ந்தவர்.இவர் கபடி விளையாட்டு வீரர்.
*திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மதுரையில்  வாகன விபத்தில் உயிரிழந்து விட்டார்.இவரது அப்பா மகாராஜன் ஊரில் ஆடு மேய்த்து வருகிறார். காவலர் சந்திர சுபாஷ் க்கு திருமணமாகாத 2 தங்கைகள் உள்ளனர்.மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த மறைந்த காவலர் சந்திர சுபாஷ் தான் அந்த குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக இருந்து வந்துள்ளார். அந்த குடும்பம் காவலரின் இறப்பிலிருந்து மீளாத நிலையில் தற்போது பெரும் துயரத்தில் இருந்து வருகிறது. காவலரின் நெருங்கிய நண்பரான கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் FINGER PRINT SI ஆக பணிபுரிந்து வரும் திரு. சித்திரைச் செல்வன் மேற்படி காவலர் குடும்பத்திற்கு உதவி செய்வதுபோல் நடித்து அவருக்கு வந்த இழப்பீடு மற்றும் காப்பீட்டு தொகையை படிப்பறிவு இல்லாத அந்தக் காவலரின் அப்பாவை ஏமாற்றி 30,00000/- (30 லட்சம்) ரூபாயை தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார்.

இறந்த காவலர் சந்திர சுபாஷ் க் கான இழப்பீடு தொகை மற்றும் காப்பீட்டு தொகை வருவதற்கு SI.சித்திரைச் செல்வன் சந்திர சுபாஷ் ன் அப்பாவிற்கு Bank Account மற்றும் ATM Card வருவதற்கு *ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.அந்த அக்கவுண்டில் ஏறக்கூடிய பண விபரத்தை SI சித்திரைச் செல்வன் தன்னுடைய தொலைபேசி எண்ணிற்கு வரும்படி ஏற்பாடு செய்துள்ளார். இறந்த காவலரின் குடும்பத்திற்கு தெரியப்படுத்தாமல் ஏமாற்றி மோசடி செய்து மேற்படி பணத்தை கையாடல் செய்துள்ளார் உதவி ஆய்வாளர் சித்திரைச் செல்வன்.
*கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி ஆயுதப்படை அலுவலகத்தில் இருந்து இறந்த காவலரின் தகப்பனாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களுடைய மகனுக்கு 4,50,000/- (நான்கு அரை லட்சம் ரூபாய்) வந்துள்ளது நீங்கள் நேரடியாக வந்து மேற்படி பணத்திற்கான செக்கை பெற்று கொள்ளலாம் என்று சொன்னதற்கு இணங்க சென்று பார்த்துள்ளனர்.

ஆயுதப்படை அமைச்சுப் பணியாளர்கள் இறந்த காவலரின் தந்தையாரிடம் ஏற்கனவே 30 லட்சம் ரூபாய் உங்களுடைய அக்கவுண்டிற்கு வந்துள்ளது அதை என்ன செய்தீர்கள் என்று கேட்ட போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவ்வாறு எதுவும் பணம் வரவில்லை என்று கூறியுள்ளனர்.இறந்த காவலரின் குடும்பத்தினர் உடனடியாக வங்கிக்கு சென்று Bank Account pass book யை‌ Entry செய்து பார்த்த பின்புதான் தான் தெரியவந்தது. ஒட்டு மொத்த பணத்தையும் சித்திரைச் செல்வன் SI தன்னுடைய அக்கவுண்டிற்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அந்த குடும்பத்திற்கு. பணம் கிடைத்தால் பிணமும் வாயைப் பிளக்கும் என்ற கூற்றிற்கு ஏற்ப உதவி ஆய்வாளரின் செயல்பாடு இருந்துள்ளது. ஆகவே மேற்படி பணத்தை இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்படி உதவி ஆய்வாளர் சித்திரை செல்வன் மீது உரிய விசாரணை செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று அந்த ஊர் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Previous article இரவில் கொழுந்துவிட்டு  எரிந்த தீ! தீயணைப்பு துறையினர் வராததற்கு இது தான் காரணமா?
Next articleகையை பின்னாடி விட்றியா? நான் என்ன பண்றேன் பாரு! பெண் வக்கீலின் சமயோகித செயல்!